அல்வாய் கிழக்கு, மாலைசந்தையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ.முத்துக்குமாரசாமிக்குருக்கள் ஸ்கந்தசபேசன் குருக்கள் ( சபேஸ் ஐயா ) அவர்கள் 30.03.2025 ஞாயிறு அன்று அதிகாலை தனது 81வது அகவையில் கொழும்பில் இறைவன் கழலடி சேர்ந்தார்.
அன்னார் அல்வாய் ப்ரம்மஸ்ரீ முத்துக்குமாரசாமிக்குருக்கள் மனோன்மனிஅம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், அமிர்தவல்லி அம்மாவின் அன்புச்சகோதரனும்
மீசாலை பிரம்மஸ்ரீ கல்யாண சுந்தரக்குருக்கள், தைலாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமியின் அன்புக்கணவரும், சிந்துஜா, ரமேஷ்சர்மா வின் அன்பு தந்தையாரும்,
சர்வேஷ்வரசர்மா, சந்தியாவின் அன்பு மாமனாரும் மற்றும்,
சுபஶ்ரீ, தரங்கிணி, சித்தேஷ் மற்றும் ரமேஷ்சர்மாவின் பிள்ளைகளின் அன்பு பாட்டனாருமாவார்.

இறுதிக்கிரியைகள் அல்வாய் கிழக்கு, மாலைசந்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (01.04.2025) பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்,
இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடுப்பத்தினர்.
0094776629498 – மகன்
0094212264549