சின்னையா சின்னத்தம்பி
- பார்வதி மடியில்-23/03/1939
- பரமசிவன் அடியில்-01/05/2013
எழுவரைப் பெற்று சிறப்பாக வளர்த்தெடுத்து
வறுமையிலும் செம்மையாக
வளத்துடன் வாழவைத்து
பிறருக்கு கொடுத்தலே தலையாய கடமையென
கொடுத்து கொடுத்தே உத்தமரானவர் அப்பா!
வடமராட்சியில் முதன் முதலில் தட்டிவான் வாகனம் ஓடி
தட்டிவான் தங்கராசாவாய்
மிளிர்ந்தவர் அப்பா!
கரவெட்டி வயல்களெல்லாம் உழவு இயந்திரத்தால் இரவு பகலாய் ஊதியம் வாங்காது உழவு செய்தவர் எங்கள் அப்பா.
தமிழர் காங்கிரஸ் கொடிதனை உழவு இயந்திரப் பெட்டியில் வரைந்து,கழுமரம் ஏறி காங்கிரஸ் கொடியை பறித்துவந்தவர் எங்கள் அப்பா.
உடுப்பிட்டி சிங்கம் தேர்தலில் தோற்றபோது மொட்டை போட்டவர் எங்கள் அப்பா!
வெள்ளை வெளேரென உடை உடுத்து,நெற்றியில் மூன்று குறி பூச்சுடன் எழுபத்தைந்து வயதுவரை எம்முடன் வாழ்ந்தவர் எங்கள் அப்பா.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
தகவல் : குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிரோம்