பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், தலவாக்கலை, இறக்குவான மற்றும் ஜா எல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகமணி மகேந்திரன் அவர்கள் நேற்று 12.04.2024 (வெள்ளிக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி – செல்லம்மா தம்பதியரின் அன்பு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – செல்லாச்சி தம்பதியரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
காலஞ்சென்ற தங்கமலர் அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும், பிரதீபன் (DFCC BANK), சஞ்சுதா (Shakthi TV) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
மகாலட்சுமி (கனடா), தேவதாஸ் (பேர்லின்-ஜேர்மனி), லோகேந்திரலிங்கம் (கனடா), சிவராமன் (வவுனியா) ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார்.
யசங்கி (Seylan Bank), கிருஷாந்த (Shakthi TV) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
திலன்யா, திவேன், தேஜஸவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான இலட்சுமணசாமி மற்றும் சாவித்திரி (பேர்லின் – ஜேர்மனி), பத்மலோஜினி (கனடா), செந்தில்மணி (வவுனியா) கனகசபை, மகேஸ்வரி, தனலட்சுமி, கனகமலர், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
தகவல் | குடும்பத்தினர்
- தகனம்Mon, 15-04-2024 11:00 ஜா எல, கப்புவத்த மயானம்கொழும்பு, இலங்கை